தனுஷ், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த 3 படத்தின் தெலுங்கு உரிமையை பெரிய தொகைக்கு வாங்கி வெளியிட்டார் நட்டி குமார் என்பவர்.
ஆனால் தெலுங்கில் படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் நஷ்டம் அடைந்துவிட்டது. இந்த நட்டத்தை ரஜினி ஈடுகட்டுவார் என நட்டி குமார் கூறியதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, அது பரபரப்பைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரஜினி அறிக்கை விட வேண்டி வந்தது. மேலும் தனுஷும், ரஜினிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக